துர்காவ் கன்டோனில் பரிதாபம் : கட்டுமானத்தளத்தில் ஒருவர் பலி
சனிக்கிழமை, செப்டம்பர் 20 அன்று, சுவிட்சர்லாந்தின் துர்க்காவ் கண்டோன், ஃப்ராவென்ஃபெல்டில் (Frauenfeld) உள்ள கட்டுமானத் தளத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவர் ஒரு இயந்திரத்தை இயக்கும் போது நிகழ்ந்த அந்தச் சம்பவம், கட்டுமானத் தள பணிகளில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்துகிறது.
கண்டோனல் போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் , ஆரம்ப பகுப்பாய்வு முடிவுகள் மேலும் தெளிவாகும் வரை, பாதிக்கப்பட்டவர் இரண்டு ரயில் டிரெய்லர்களுக்கிடையில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் 30 வயதான சுவிஸ் நாட்டவர் எனவும் பலத்த காயமடைந்த அவர் அவசர சிகிச்சை மற்றும் மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
துர்க்காவ் கண்டோனல் போலீசாரும், ஃப்ராவென்ஃபெல்டு நீதித்துறையுடன் இணைந்து, இந்த துயரமான சம்பவத்தின் சரியான சூழலையும் காரணங்களையும் தற்போது விசாரணையில் ஆராய்கின்றனர். இந்த சம்பவம், கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு நுட்பங்களை மீறாமல் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமெனும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.
© Kapo TG