சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த மிகவும் வயதான நபராக கருதப்பட்ட மூதாட்டி ஒருவர் மரணமடைந்துள்ளார். டைட்டானிக் மூழ்குவதற்கு முன்பு பிறந்ததாக கருதப்படும் சுவிஸ் பெண் கடந்த வெள்ளிக்கிழமை தனது 111 வயதில் இறந்தார்.
அவர் தனது வாழ்க்கையின் கடைசி இருபது ஆண்டுகளை பெர்னீஸ் ஜுராசிக் பகுதியில் உள்ள ஓர்வினில் உள்ள ஓய்வு இல்லத்தில் கழித்துள்ளார்.
திங்களன்று ஜூரா மாகாணத்திலுள்ள ஒரு பத்திரிகை இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

மேரி குர்னே என்றழைக்கப்படும் குறித்த பெண், மார்ச் 26, 1912 இல் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 111 மற்றும் 332 நாட்கள்.
உண்மையில் இதற்கு முன்னர் 112 வயதில் வாழ்ந்த ஒரு பெண்மனி சுவிட்சர்லாந்தில் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்னராக குறித்த பெண்மணி 2021 ஆண்டு முதல் ‘சுவிட்சர்லாந்தின் மூத்த நபர்’ என்று அழைக்கப்படுகிறார்.
சென்ட் கேலனில் உள்ள ஒரு மாணவி, ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி, அவர் உண்மையில் சுவிட்சர்லாந்தில் மிகவும் வயதான பெண் என்பதை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.