ஜூன் 13, வியாழன் அன்று, இரவு 7 மணிக்கு முன்னதாக, கன்டோன் ஆர்காவில் நூஸ்பாமெனில் உள்ள ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பின் நிலகீழ் வாகன தரிப்பிடத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததோடு அந்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் முன்னுக்குபின் முரணான தகவல்கள் வெளியாகியவண்ணம் இருந்தது.
பின்னர் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களால் தீவிர விசாரணை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புக்கான காரணம் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடித்தமையே என கண்டுபிடிக்கப்பட்டது.
வாட்சன் இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த வெடிப்பில் 43 வயதான இத்தாலியரும் 24 வயதான ஒரு சுவிஸ் நபரும் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தனர்.
மேலும் இச்சம்பவத்தின் காரணமாக குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக கடைகளுக்கு ஏற்பட்ட சேதமும் பெரிய அளவிலாளது. சுமார் பன்னிரண்டு சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. ஒரு பிஸ்ஸேரியா மற்றும் ஒரு சிகையலங்கார நிலையம் அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்காவ் கட்டிடக் காப்பீட்டு நிறுவனம் குறித்த சேதங்களுகான மில்லியன்கணக்கான செலவீடுகளை ஏற்றுக்கொண்டுள்ளது. இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் இன்னும் வாழத் தகுதியற்றவையாவே காணப்படுகிறது. மற்றும் பல எண்ணிக்கையிலான குத்தகைதாரர்கள் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த வெடிவிபத்திற்கு யார் காரணம்? அல்லது விபத்தின் போது நிலக்கீழ் கார் நிறுத்துமிடத்தில் இருந்த பார்வையாளர்களா பாதிக்கப்பட்டவர்ள்? இவ்வாறான கேள்விகள் தொடர்ந்தும் எழுந்தவண்ணம் இருந்தன. இருப்பினும் சட்ட அமுலாக்க மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அவை குறித்து கருத்து எதையும் அப்போது தெரிவித்திருக்கவில்லை.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெரிய அளவிலான பட்டாசுகள் வெடித்ததன் மூலமே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தற்போது அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் வெடிப்பு ஏற்பட்ட அறையில் இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளது.
அந்த இருவருமே குறித்த விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை அதிக அளவில் அங்கு பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ‘முக்கிய நிகழ்வுகளில் பொது வானவேடிக்கை காட்சிகளில் பயன்படுத்தப்படுவது போன்ற வானவேடிக்கைகள் அதிகம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த வகை அதிசக்திவாய்ந்த பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கும் கையாளுவதற்கு விசேட அனுமதி தேவை. எனவே அவ்வாறு இல்லாமல் தந்திரமான முறையில் இவர்களால் இந்த பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது.
image (c) pkr
சம்பவம் நடந்த அறையில் பயிற்சி எதுவும் இன்றி தாங்களே பட்டாசு வெடிக்க முயற்சித்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ‘தற்போதைய விசாரணை முடிவுகளின் படி இறந்த இரு நபர்களும் பைட்ரோடெக்னிக்குகளில் மிகவும் ஆர்வமாக உடையவர்களாக இருந்துள்ளனர். அநேகமாக அவர்கள் அந்த பட்டாசுகளை வைத்து தங்கள் சொந்த தயாரிப்புகளை உருவாக்க முயற்சித்திருக்கலாம்’ என்று ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுபோன்ற பரிசோதனையின் விளைவாகவே ஜூன் 13 அன்று பொருட்கள் தற்செயலாக தீப்பிடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது என. அரசு வழக்குரைஞர் அலுவலகம் தெரிவிக்கிறது. அறையில் அதிக அளவு பைரோடெக்னிக்குகள் பயன்படுத்தப்பட்டபோது மூடிய அந்த இடத்தில் மேலும் பரவ முடியாத அளவு வாயு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
வாயு வெளியேறுவதற்கு போதிய இடமின்மையால் இதன் விளைவாக ஏற்படும் அழுத்தம் அறையின் சுவர்கள் மற்றும் நிலத்தடி கார் பார்க்கிங்கின் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் அதிக வெப்பம் உருவாகி தீப்பிளம்புகள் தோற்றுவிக்கப்பட்டு எஞ்சியிருந்த பட்டாசுகளுடம் தீப்பிடித்து வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அங்கு மிகபெரிய அழுத்தத்துடன் அந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற பரிசோதனையின் விளைவாகவே ஜூன் 13 அன்று பொருட்கள் தற்செயலாக தீப்பிடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது என. அரசு வழக்குரைஞர் அலுவலகம் தெரிவிக்கிறது. அறையில் அதிக அளவு பைரோடெக்னிக்குகள் பயன்படுத்தப்பட்டபோது மூடிய அந்த இடத்தில் மேலும் பரவ முடியாத அளவு வாயு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வாயு வெளியேறுவதற்கு போதிய இடமின்மையால் இதன் விளைவாக ஏற்படும் அழுத்தம் அறையின் சுவர்கள் மற்றும் நிலத்தடி கார் பார்க்கிங்கின் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் அதிக வெப்பம் உருவாகி தீப்பிளம்புகள் தோற்றுவிக்கப்பட்டு எஞ்சியிருந்த பட்டாசுகளுடம் தீப்பிடித்து வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அங்கு மிகபெரிய அழுத்தத்துடன் அந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மூன்றாவது நபர்கள் யாரும் சிக்கியுள்ளனரா.??
இந்த விபத்தில் 43 வயதான இத்தாலியரும், 24 வயதான சுவிஸ் நபரும் உயிரிழந்துள்ளனர் என்பது ஏற்கனவே தெரிந்ததே. எவ்வாறாயினும்இ வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு அவசர சேவைகளுக்குத் தெரிவித்த மூன்றாம் நபர் அக்குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்தவர். அவர் பாதிக்கப்பட்ட இருவரையும் நன்கு அறிந்திருந்தார். சாட்சியங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க அவர் தற்காலிகமாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். எனினும் 33 வயதான போர்ச்சுகீசியரான அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வெடிகுண்டு குற்றம், பயங்கரவாத பின்னணி அல்லது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பூர்வாங்க மதிப்பீடுகளின் படி தவறான கையாளுதல் மற்றும் சட்டவிரோத பட்டாசுகள் சேமிப்பை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஆபத்தான பொருட்களுடன் முற்றிலும் முன் அனுபவம் இன்றி தவறான செயற்பாடுகளுக்கு. இரண்டு பேர் தங்கள் உயிரை பணயம் வைத்தது தவறான ஒரு யமாகவே கருதப்படுகிறது.