செயின்ட் காலன் மாநிலத்தில் இரவு நேர கொள்ளை – கார்கள் மற்றும் இயந்திரங்கள் திருட்டு
சுவிஸ் நாட்டின் செயின்ட் காலன் மாநிலம், வில் (Wil) பகுதியில் உள்ள செயின்ட் காலர் வீதியில் சனிக்கிழமை (27.09.2025) அதிகாலை இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. நடு இரவு முதல் காலை 2.45 மணி வரை நடந்த இந்தச் சம்பவங்களில், அடையாளம் தெரியாத குற்றவாளிகள் இரண்டு தனித்தனி கட்டிடங்களில் வலுக்கட்டாயமாக புகுந்து அலுவலகங்களையும் சேமிப்பிடங்களையும் சோதனை செய்தனர்.
முதல் இடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் அவர்கள் ஒரு கார் மற்றும் அதற்கான எண் பலகையைத் திருடிச் சென்றனர். இரண்டாவது இடத்தில், பல லட்சம் சுவிஸ் பிராங்க் மதிப்புள்ள கட்டுமான இயந்திரங்கள் திருடப்பட்டன.

குற்றவாளிகள் எந்த திசையில் தப்பிச்சென்றார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. சம்பவ இடங்களில் எவ்வளவு சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் இன்னும் கணக்கிடப்படவில்லை.
செயின்ட் காலன் மாநில காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும், குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய இரவு நேர கொள்ளைகள், உள்ளூர் வணிக வளாகங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளன.
© Kapo SG