மொபைல் போன் திருடன் : கியோஸ்க் ஊழியர்களால் பிடிக்கப்பட்ட நபர் கைது
சென்ட்கேலன் மாகாணத்தில் சனிக்கிழமை (17.08.2025) இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை, பலர் தங்களின் கைப்பேசி திருடப்பட்டது என்று போலீசில் புகார் செய்தனர். இரவு 2.30 மணியளவில், ஒரு 39 வயது ஆள்ஜீரிய நபர் மேட்ஸ்கெர்காசே (Metzgergasse) பகுதியில் உள்ள கியோஸ்கில் பொருட்கள் வாங்கினார். அவர் வெளியேறிய சில நிமிடங்களுக்குப் பிறகு, பணியாளர் ஒருவர் தனது கைப்பேசி காணாமல் போனதை உணர்ந்தார்.
உடனடியாக, அவர் இன்னொரு பணியாளருடன் சேர்ந்து அந்த நபரைத் துரத்தி, குறுகிய நேரத்திலேயே பிடித்தனர். பின்னர் சந்தேகநபரை கியோஸ்க்கு மீண்டும் அழைத்துச் சென்றனர். அங்கு அப்போது வந்திருந்த சென்ட்கேலன் நகரப்போலீஸ் ரோந்து குழு அவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

பல கைப்பேசிகள் மற்றும் வங்கி அட்டைகள் கண்டுபிடிப்பு
போலீசார் நடத்திய சோதனையில், காணாமல் போன கைப்பேசியுடன் சேர்ந்து, மேலும் பல சந்தேகத்திற்கிடமான கைப்பேசிகள் மற்றும் வங்கி அட்டைகள் அந்த நபரிடம் இருந்தன. இதன் அடிப்படையில், அவர் நகரில் பல திருட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணையும், குடிவரவு நடவடிக்கையும்
கைது செய்யப்பட்டவர் 30 வயது அல்ஜீரிய நபர் என போலீசார் தெரிவிக்கின்றனர் . விசாரணையை சென்ட்கேலன் மாநில குற்றவியல் துறை வழிநடத்துகிறது. கூடுதலாக, சம்பந்தப்பட்ட குடிவரவு அலுவலகம் வெளிநாட்டவர் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என பரிசீலித்து வருகிறது.
@Kapo SG