சுவிட்சர்லாந்தின் சப்கவுசன் பகுதியில் இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர்.
27 வயதான மரியம் மக்டி அகமது எல்டோஃபைலி என்ற குறித்த பெண் ஜனவரி 31, புதன்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 இல் பிறந்த குறித்த பெண் சுமார் 168 சென்ரிமீற்றர் உயரம் கொண்டவர்.

அவர் அடர் பழுப்பு நிற முடி உடையவர் எனவும் தலையில் முக்காடு போட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போன போது, காணாமல் போன பெண் பழுப்பு நிற கோட், சாம்பல் நிற ஜிம் ஷார்ட்ஸ், சாம்பல் நிற பின்னப்பட்ட தொப்பி அணிந்திருந்தார்.
அரபு, ஆங்கிலம் மற்றும் ஓரளவுக்கு ஜெர்மன் பேசக்கூடியர் எனவும் போலீசார் தெரிவித்தனர். காணாமல் போனவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், 0526242424 என்ற இலக்கத்திற்கு, அல்லது வேறு ஏதேனும் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தரும்படியும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.