துர்காவ் கன்டோனில் செத்து மிதக்கும் மீன்கள் வெளியான காரணம்
துர்காவ் கன்டோனில் உள்ள எர்லென் பகுதியில் டோபெல்பாக் ஆற்றில் ஏராளமான மீன்கள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் ஏற்பட்ட மாசு இதற்கு காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 17, வியாழக்கிழமை ஒரு நிறுவனத்தின் வளாகத்தில் நடந்த சுத்திகரிப்பு பணிகளின் போது, ஒரு குழாய் வழியாக மாசு கலந்த திரவம் ஆற்றில் கலந்ததாக கருதப்படுகிறது.
ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை ,துர்காவ் கன்டோன் காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மீன்கள் இறப்புக்கு காரணமான திரவத்தின் தன்மை இன்னும் தெளிவாகவில்லை. சனிக்கிழமை காலை 9:00 மணியளவில், ஒரு உள்ளூர் பெண் ஆற்றில் மாசு இருப்பதை காவல்துறையில் தெரிவித்தார்.

உடனடி நடவடிக்கை
இதையடுத்து, தீயணைப்பு படையினர் ஆற்றில் இரண்டு தடுப்பு அணைகளை அமைத்து, மாசு கலந்த நீரை பல சேகரிப்பு கலன்கள் வழியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு திருப்பி விட்டனர்.
எத்தனை மீன்கள் இறந்தன, இந்த மாசு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் இல்லை. இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களையும் காவல்துறை விசாரித்து வருகிறது.
@Keystone SDA