சென்ட்காலன் கொசாவ் பகுதியில் ஏற்பட்ட சோகம். 800 உயிர்கள் தீயில் கருகி பலியான சம்பவம்!! சென்ட்காலன் கொசாவ் பகுதியில் உள்ள ஒரு பன்றிப்பண்ணையில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக சென்ட்காலன் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த பன்றிப்பண்ணையில் சுமார் 1500 பன்றிகள் இருந்துள்ளதாகவும் 700 பன்றிகள் காப்பாற்றப்பட்டுள்ளதோடு, மீதி 800 பன்றிகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.
பன்றி தொழுவத்தில் தீ ஏற்பட்டு அதன் கூரை இடிந்து விழந்துள்ளது. சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினரின் தொடர்ச்சியான போராட்டத்தினால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. பன்றிகளில் சுமார் 90 தாய் பன்றிகளும், 600 பன்றிக்குட்டிகளும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் 800 பன்றிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.