சுவிஸ் மண்ணில் இருந்து மனதை மயக்கப்போகும் ‘மாயவள்’ பாடல்.!! பெப்ரவரி என்றாலே காதலர்களுக்கு ஒரே சந்தோசம்தான்.. காரணம் உலகலாவிய ரீதியில் பெப்ரவரி 14 ம் திகதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுவதால் ஒவ்வொரு காதலனும் காதலியும் தன்னுடைய காதலன் அல்லது காதலிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என திட்டம் தீட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
அப்படியான ஒரு திட்டத்தை தீட்டி புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு காதலர் தின பரிசாக ஒரு பாடலை வழங்க திட்டமிட்டுள்ளார்கள் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இளம் கலைஞர்கள்.

சுவிற்சர்லாந்தில் Youtube மற்றும் TikTok செயலிகள் மூலம் தமது திறமைகளை அவ்வப்போது வெளிக்காட்டி வந்த kajanthan மற்றும் Sujana என்ற இளம் தம்பதிகளே தங்களது கன்னி முயற்சியை பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினம் அன்று உலகம் முழுவதும் வெளியீடு செய்கிறார்கள்.
புலம்பெயர் தமிழர்களின் பல படைப்புகள் உலகம் போற்றும் படைப்புகளாக இன்றும் பார்க்கப்படுகிறது. இயந்திரமான இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் தமது திறமைகள் மழுங்கடிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பெரும் முயற்சி எடுத்து இவ்வாறான படைப்புகளை உருவாக்குகிறார்கள். அப்படியான கலைஞர்களுக்கு உந்து சக்தியாக இருக்கவேண்டியது கலையை மதிக்கும், கலையை ரசிக்கும் ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

அவ்வாறே SwissTamil24.Com இணையக்குழுமமும் இவர்களது படைப்பு உலகம் போற்றும் படைப்பாக இருக்கவேண்டும் என முன்கூட்டிய வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பல ரசிகர்களோடு சேர்ந்த நாமும் காத்திருக்கிறோம்.
‘மாயவள்’ என்ற அழகிய பெயரோடு, இயற்கையின் அழகையும் பெண்ணின் அழகைப்பற்றியும் அழகாக சொல்லும் ஒரு பாடலாக இது இருக்கும் என பாடல் குழுவினர் SwissTamil24 இணையத்திற்கு தெரிவித்தார்கள்.

காதலர்தினத்தன்று வெளியாகும் ‘மாயவள்’ மக்கள் மனதை மாயப்படுத்துவாளா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. ‘மாயவள்’ பாடலுக்கு பின்புலத்தில் நின்று உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் பாடல் வெற்றி பெற மீண்டும் SwissTamilRadio, SwissTamil24.Com சார்பில் வாழ்த்துக்கள்.
மாயவளுக்காக பின்னின்று உழைத்த கலைஞர்கள் விபரம்..
Album Name :- Maayaval
Relese:- feb 14 2023
Out :- Kaji&suji Vlog YouTube channel & Spotify Sung &
composed by – vidushaan
Cast-kajanthan & Sujana
Lyrics-kajanthan
Music – Dhroga
Mixed and masterd by – sanjit lucksman
Makeup & costume-SSDiamondBeauty
Videography- butterfly effects
ஊடக பங்களிப்பு :- GlobalTamizhaMedia Network (SwissTamilRadio.Com/SwissTamil24.Ch/GlobalTamizha.Com)
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.