போலீசாரை மிரட்டி தாக்க முற்பட்ட கொசோவா நாட்டு இளைஞன் கைது
கடந்த வெள்ளிக்கிழமை (29 ஆகஸ்ட் 2025) இரவு 8 மணிக்குப் பின், சென்ட்கேலன் மாகாணத்தின் புக்ஸ்ப் (Buchs) ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு மூன்றாம் நபர் அளித்த தகவலின் அடிப்படையில், கன்டோன் போலீசார் அவசரமாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு 36 வயதுடைய ஒருவரை அவர்கள் கண்டுபிடித்தனர். அவரை சோதனை செய்ய முற்பட்டபோது, அந்த நபர் போலீசர்களுக்கு எதிராக கோபமாக நடந்து கொண்டார். முதலில் அவர் வாய்வழியாக மிரட்டியதோடு, பின்னர் உடல்ரீதியாக தாக்கவும் முயன்றார்.
இந்நிலையில், இரண்டாவது ரோந்து குழு உதவியுடன் சம்பவம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கொசோவோ (Kosovo) நாட்டைச் சேர்ந்த அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார்.

காவலில் இருக்கும் போதிலும் அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, மேலும் மிரட்டல்களையும் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரிடம் இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக, அந்த 36 வயது நபருக்கு எதிராக “அதிகாரிகள் மற்றும் போலீஸ் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல்” குற்றச்சாட்டின் பேரில் செயின்ட்.காலென் மாநில வழக்கறிஞர் அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
@Kapo SG