லௌசான் நகராட்சித் தேர்தல் 2026: தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளம் வேட்பாளர் அக்சனா குமாரசாமி போட்டியில்
லௌசான் (Lausanne) நகரில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளம் அரசியல் செயற்பாட்டாளர் அக்சனா குமாரசாமி போட்டியிடுகிறார். அரசியல் மற்றும் நிர்வாகத் துறையில் உயர் கல்வி கற்று வரும் அவர், பொதுக் கொள்கை மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவராக அறியப்படுகிறார். கல்வித் தகுதிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ் மொழிக் கல்வியிலும் பயிற்சி பெற்றுள்ள அவர், சமூக மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அக்சனா குமாரசாமி, Swiss Social Democratic Party (PS) கட்சியின் பட்டியல் 5 (Liste 5) கீழ் இத்தேர்தலில் களம் காண்கிறார். சமூக நீதி, இளையோரின் அரசியல் பங்கேற்பு, மற்றும் பல்வகைமை பிரதிநிதித்துவம் போன்ற விடயங்கள் தனது முக்கியக் கொள்கை அம்சங்களாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
லௌசானில் வசிக்கும் வாக்குரிமை பெற்ற குடிமக்கள், வரவிருக்கும் தேர்தலில் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களிக்குமாறு அவரது ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 2026ஆம் ஆண்டுக்கான இந்த நகராட்சித் தேர்தல், உள்ளூர் நிர்வாக அமைப்பில் பல்வேறு சமூகங்களின் குரல் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.