சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் 26.12.2023 செவ்வாய்கிழமை மாபெரும் இன்னிசை நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளது. சுவிட்சர்லாந்தின் ‘நண்பர்கள்’ இசைக்குழுவினரின் இசை மழையில் குறித்த நிகழ்வு பிற்பகல் 16 மணிக்கு ‘வரசித்தி மஹால்’ மண்டபத்தில் சங்கமிக்க இருக்கின்றது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க ஜீவராஜா இ சாரங்கா இசைக்குழு பானுஇ ஈழத்து சிம்மக்குரலோன் இரகுநாதன் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

மேலும் இவர்களோடு சுவிஸ் கலைஞர்களும் மேலும் பல தாயக கலைஞர்களும் பங்கு பற்ற இருக்கின்றனர. பாடல் இசைக்கச்சேரி என இசையால் உங்களை மயக்கவிருக்கின்றனர் இசைக்கலைஞர்கள்.
சுவிஸ்வாழ் இசை ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரையும் குறித்த ‘இசைத்தென்றல் 2023’ கலை நிகழ்வுக்கு வருக வருக என வரவேற்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.