Herisau AR எரிபொருள் நிலையத்தில் கொள்ளைடிக்க முயன்ற நபர் தப்பியோட்டம் * சனிக்கிழமை, டிசம்பர் 17, 2022 அன்று, Herisau வில் உள்ள பெட்ரோல் நிலையக் கடையை ஒருவர் ஒருவர் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
சனிக்கிழமை மாலை 6:30 மணிக்குப் பிறகு, Herisau வில் Alpsteinstrasse வில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையக் கடைக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்தார். அவர் காசு செலுத்தும் பகுதிக்கு சென்று காசாளரிடம் கத்தி முனையில் பணம் கேட்டார்.
அதன்பிறகு, கல்லாவில் இருந்தவர் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபடவே குற்றவாளி தனது திட்டத்திலிருந்து விலகி, வாங்கிய பொருட்களைக் கொண்டு தப்பிச் சென்றார். இச்சம்பவத்தின் போது இழப்பு ஒரு சிறிய தொகை எனவும் இச்சம்பவத்தின் போது யாருக்கும் எந்த காயங்களோ ஏற்படவில்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றவாளி தொடர்பான அங்க அடையாளங்கள் கீழே விபரிக்கப்பட்டுள்ளள. அடையாளம் தெரிந்தவர்கள் குறித்த கன்டோனல் போலீசாரிடம் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Herisau AR எரிபொருள் நிலையத்தில் கொள்ளைடிக்க முயன்ற நபர் தப்பியோட்டம்