சென்ட்கேலன் – ஹீர்ப்ரூக் ரயில் நிலையக் கொலை வழக்கு – சந்தேகநபர் கைது
கடந்த வெள்ளிக்கிழமை, சென்ட்கேலன் – ஹீர்ப்ரூக் ரயில் நிலையத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, 34 வயதுடைய குரோஷிய நபர் ஒருவரை செயின்ட் காலென் மாநிலக் காவல்துறை கைது செய்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
சந்தேகநபர் அணிந்திருந்த ஜாக்கெட்டை காவல்துறை தேடுகிறது
குற்றம் நடந்த அந்த நேரத்தில், சந்தேகநபர் மஞ்சள் அல்லது வெளிர் நிற ஜாக்கெட் அணிந்திருந்ததாக தெரிகிறது. அந்த ஜாக்கெட்டை கண்டவர்கள், எடுத்தவர்கள் அல்லது எங்காவது கைவிட்டவர்கள் உடனடியாக காவல்துறையுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சந்தேகநபருக்கு விசாரணைத் தடுப்பு காவல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) அன்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். வீடியோ பதிவு மூலம் அவரது அடையாளம் உறுதிசெய்யப்பட்டது. செயின்ட் காலென் மாநிலத்துக்கான விசாரணை நீதிமன்றம், அவரது மீது மூன்று மாத விசாரணைத் தடுப்பு காவலை அனுமதித்துள்ளது.
பலியானவரின் வயது குறித்த திருத்தம்
பலியானவர் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தவர். அவர் அஸைலம் (தஞ்சம்) கோரிய போது தனது பிறந்த வருடத்தை 2007 என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது, மக்கள் இடம்பெயர்வு இராஜாங்க செயலாளர் அலுவலகம் (SEM) பெற்றுள்ள அவருடைய சொந்த நாட்டின் ஆவணங்கள் மூலம், அவர் 2001ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த விசாரணையில் முக்கியமான மஞ்சள் அல்லது வெளிர் நிற ஜாக்கெட் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், தயவுசெய்து செயின்ட் காலென் மாநிலக் காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
@kapo SG