கன்டோன் சென்ட்காலன் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் சம்பவம் ஒன்று இடம பெற்றுள்ளது.
19 வயது இளைஞன் ஒருவர் திருட்டு முயற்சியின் போது, நார்ட்ஸ்ட்ராசாவில் வைத்து இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது 19 வயது இளைஞன் சிறிய காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொண்ட அடையாளம் தெரியாத நபர் தப்பி ஓடியுள்ளார்.
போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, 19 வயது இளைஞனை அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர் ஒருவர் அணுகி பணத்தை ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.
19 வயது இளைஞன் தன்னிடம் ஒன்று இல்லை என்று கூறினார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒரு பொருளால் அவரை தலை மற்றும் உடலில் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, காயமடைந்த இளைஞன் சிலரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். தலைமறைவாகிய நபரை போலீசார் தேடிவருவதுடன் கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணையை தொடங்கியுள்ளனர்.