சுவிட்சர்லாந்தில் வீடுகளின் விலைகள் 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிலும் மேலும் உயர்ந்துள்ளன. அண்மைய தரவுகளின்படி, தனி குடும்ப வீடுகள் (Single-family homes) தற்போது குடியிருப்புகளை (Condominiums) விட சிறிது அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
நாட்டின் முழுவதும் பரிமாற்ற விலைகள் கடந்த இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது சராசரியாக 1% உயர்ந்துள்ளதாக சுவிட்சர்லாந்து வீட்டுமனை ஆலோசனை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தனி வீடுகளின் விலை 1.1% அதிகரித்துள்ள நிலையில், குடியிருப்புகளின் விலை 0.8% மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, சுவிட்சர்லாந்தின் குடியிருப்பு சொத்துகளின் மொத்த விலை 2.6% உயர்ந்துள்ளது.
பல குடும்பங்களுக்கான (multi-family) மற்றும் கலப்பு பயன்பாட்டு சொத்துகளுக்கும் (mixed-use properties) தேவைகள் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் விலையும் மூன்றாம் காலாண்டில் 1.3% உயர்ந்துள்ளது.

ஆனால், ஆண்டு முழுவதும் சராசரியாக விலை உயர்வு 1.5% ஆக மட்டுப்பட்டுள்ளது — இது 1998 முதல் காணப்படும் நீண்டகால சராசரி 3% உயர்வை விட குறிப்பிடத்தக்க வகையில் குறைவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் தேசிய வங்கியின் (SNB) குறைந்த வட்டி கொள்கையே தற்போதைய சொத்து விலை உயர்விற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வட்டி வீதம் பூஜ்யமாகத் (zero interest) தக்கவைத்துள்ளதால், நிலையான வட்டிப் பத்திரங்களுடன் ஒப்பிடும்போது முதலீட்டு சொத்துகள் மேலும் ஈர்க்கக்கூடியவையாக மாறியுள்ளன.