போலி போலீசரிடம் பணம் வழங்கும் முயற்சி துர்காவ் போலீசாரால் முறியடிப்பு
துர்காவ் மாநிலத்தின் கிராய்ஸ்லிங்கன் நகரில், போலி போலீசரால் நிகழ்ந்த மோசடியை தடுப்பதில் கன்டோன் போலீசார் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பல லட்சம் ஃப்ராங்க் பணத்தை போலி அதிகாரியிடம் ஒப்படைக்க முயன்ற மூத்த தம்பதியரை அவர்கள் சரியான நேரத்தில் தடுத்துள்ளனர்.
மதியம் 12.30 மணியளவில், 81 வயதுடைய நபர் மற்றும் அவரது மனைவியால் மிகப்பெரிய அளவில் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட இருக்கின்றதென உறவினர் ஒருவர் அவசர அழைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
உடனடியாக கிராய்ஸ்லிங்கன் பாங்கிற்குச் சென்ற போலீசார், தம்பதியரை சந்தித்து விசாரணை நடத்தியபின், மோசடி நடைபெறுவதைக் கண்டறிந்து, அவர்களிடம் விடயத்தை கேட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து குறித்த 81 வயதுடைய நபர் கூறுகையில்,
கொஞ்சம் நாட்களுக்கு முன், ஒருவர் ஜெர்மனியின் புலனாய்வுத்துறை அதிகாரியாக (BKA) நடித்துப் பேசினார். அவர் கூறியதாவது:
- “வங்கிகளில் மோசடி நடக்கிறது.”
- “உங்கள் சொத்துக்கள் பாதுகாப்பாக இல்லை.”
- “உங்கள் கிரெடிட் கார்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.”
- “பணத்தை எடுத்து பாதுகாப்புக்காக BKA-விடம் ஒப்படைக்க வேண்டும்.”
மேலும், இந்த விஷயத்தை யாரிடமும் பகிரக்கூடாது என்றும், தமது புலனாய்வு நடவடிக்கையை குழப்பப்படக்கூடாது’ என்றும் எச்சரித்துள்ளளதாக குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து துர்காவ் குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து இந்த மோசடிக்குள் உள்ள அதிர்ச்சி அளிக்கும் அமைப்புகளைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
@ – Kantonspolizei Thurgau