Gossau SG: குடிபோதையில் விபத்தினை ஏற்படுத்திய டெலிவரி டிரக் டிரைவர். டெலிவரி டிரக் மூலம் விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடிய நபரை சென்ட்காலன் போலீசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணியளவில் 24 வயதுடைய நபர் ஒருவர் சென்ட்காலன் கன்டோன், கொசாவ் பகுதியிலுள்ள போஸ்ட்ஸ்திராசவில் தனது டெலிவரி டிரக் மூலம் விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
சேதத்தை சரிசெய்வது பற்றி கவலைப்படாமல் விபத்து நடந்த இடத்தை விட்டு அவர் தப்பியோடியுள்ளார். பின்னர் குறித்த நபரை சென்ட்காலன் கன்டோனல் போலீசார் கண்டுபிடித்தபோது அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே 24 வயது இளைஞரின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.