பிரௌன்ஃபெல்ட் நகரில் கார் கேரேஜ் திருட்டு: சந்தேகநபர் கைது
சுவிட்சர்லாந்தின் Frauenfeld நகரில் கார் கேரேஜ் ஒன்றில் நடந்த உடைப்பு திருட்டு சம்பவத்திற்குப் பின்னர், ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை அதிகாலை 1 மணிக்குப் பின்னர், Sägereistrasse பகுதியில் உள்ள ஒரு கேரேஜ் தொழில்நிறுவனத்தில் திருட்டு நடந்ததாக கன்டோனல் அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

தேடுதல் நடவடிக்கையின் போது, Kantonspolizei Thurgau அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 18 வயதுடைய பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனுடன், அரசு வழக்கறிஞர் அலுவலகமும் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.