சென்காலன் கன்டோன்இ சர்கான்ஸ்சில் சிறிய அளவிலான வீடு வாகன நிறுத்துமிட கூடாரம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் பிறகுஇ சர்கான்ஸ் – புரோடர்ஸ்திராஸ்சவில் ஏற்பட்டுள்ளது. கூடாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு பணியாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போது கூடாரம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
எனினும் கன்டோனல் காவல் துறையைச் சேர்ந்த பல ரோந்துப் பணியாளர்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட சுமார் 20 உறுப்பினர்களைக் கொண்ட பொறுப்பான தீயணைப்புத் துறையினர் இணைந்து தீயிணை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கூடாரம் முற்றிலும் எரிந்து நாசமானதால் ஒரு லட்சம் பிராங்குகளுக்கு மேல் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.