சென்ட்காலன் கன்டோனில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து.!! இன்று அதிகாலை 4 மணிக்குப் பிறகு, Badstrasse இல் உள்ள ஒரு முன்னாள் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உணவகத்தின் சமையல் அறைப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருள் சேதம் சுமார் 150,000 பிராங்குகள் வரை என கணக்கிடப்பட்டுள்ளது.
Bildquelle: Kantonspolizei St.Gallen
அதிகாலை 4 மணிக்குப் பின்னர் கன்டோனல் போலீசாருக்கு கிடைத்த அவசர அழைப்பின் பெயரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு பிரிவினர் மற்றும் போலீசார் சென்றுள்ளனர்.
மீட்புப் பணியாளர்களின் உதவியுடன் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Bildquelle: Kantonspolizei St.Gallen
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக சென்டகாலன் கன்டோனல் காவல்துறையின் தடயவியல் திறன் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
சுமார் 30 உறுப்பினர்களைக் கொண்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு சேவையினர் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.