ஜெர்மனியை போன்று சுவிஸில் விவசாயிகள் போராட்டம் ஆரம்பம் – விவசாயிகளின் போராட்டம் தற்போது சுவிட்சர்லாந்திலும் இடம்பெற ஆரம்பித்துள்ளது.
30 விவசாயிகள் இன்று சனிக்கிழமை காலை ஜெனிவா நகருக்குள் தங்கள் உழவு இயந்திரங்களை ஓட்டிச் சென்று தங்களது உழைப்புக்கு நியாயமான ஊதியம் வழங்கக் கோரினர்.
பாசல் பகுதியில், 30 முதல் 40 டிராக்டர்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. ஜெனீவாவில், முதல் டிராக்டர்கள் வெர்சோயிக்ஸிலிருந்து காலை 10.30 மணியளவில் வந்தடைந்தன.
அதைத் தொடர்ந்து பெர்னெக்ஸ் மற்றும் மேனியர் ஆகியவற்றிலிருந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரில், 200க்கும் மேற்பட்டோர் டிராக்டர்களை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.