சூரிச் பெடரல் தொழில்நுட்பக் கழகம் – ஐரோப்பாவின் சிறந்த பல்கலைக்கழகமாக தெரிவு
புதிய Times Higher Education உலக பல்கலைக்கழக தரவரிசை 2026 படி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் அமைந்துள்ள பெடரல் தொழில்நுட்பக் கழகம் (ETH Zurich) கண்டிணென்டல் ஐரோப்பாவில் மீண்டும் சிறந்த பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. உலகளாவிய தரவரிசையில் இது 11வது இடத்தைப் பெற்றுள்ளது.
மொத்தம் 115 நாடுகளைச் சேர்ந்த 2,092 கல்வி நிறுவனங்கள் இத்தரவரிசையில் மதிப்பிடப்பட்டுள்ளன. அதில் ETH Zurich பல்வேறு பிரிவுகளில் உயர்ந்த மதிப்பெண்களை பெற்றுள்ளது. குறிப்பாக ‘ஆராய்ச்சி’ பிரிவில் 100ல் 97.2 என்ற மிகுந்த மதிப்பும், ‘சர்வதேச நோக்கு’ பிரிவில் 95.1 என்ற சிறப்பான மதிப்பும் பெற்றுள்ளது.

அதே சமயம், இதன் சகோதர நிறுவனம் எனப்படும் லௌசானிலுள்ள உள்ள சுவிஸ் பெடரல் தொழில்நுட்பக் கழகம் (EPFL) மூன்று இடங்கள் கீழே சரிந்து 35வது இடத்தில் உள்ளது.
ETH Zurich உலகளாவிய தரவரிசைகளில் நீண்ட காலமாகவே ஐரோப்பாவின் முன்னணி கல்வி மையமாகக் கருதப்படுகிறது. அதன் உயர்தர ஆராய்ச்சி திறன், உலகளாவிய மாணவர் சேர்க்கை, மற்றும் தொழில்நுட்ப நவீனத்திற்கான பங்களிப்பு ஆகியவை இதன் மதிப்பை நிலைநிறுத்தியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் உயர்கல்வி துறை உலகளாவிய அளவில் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தி வரும் நிலையில், இத்தரவரிசை மீண்டும் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
© KeystoneSDA