தொலைபேசி மோசடியாளர்கள் காவல்துறையினர் போல் நடித்து மோசடி: ஆர்காவ் காவல்துறை எச்சரிக்கை
ஆர்காவ் கான்டனில் தொலைபேசி மூலம் மோசடி செய்பவர்கள், தங்களை காவல்துறையினர் என்று கூறி, கடந்த சில வாரங்களில் பல ஆயிரம் சுவிஸ் பிராங்குகளை கொள்ளையடித்துள்ளனர். இந்த மோசடி முறை குறித்து ஆர்காவ் கான்டன் காவல்துறை மீண்டும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
குற்றவாளிகள் தங்கள் பின்னால் உள்ளனர் என்று கூறி, ஒரு போலி காவல்துறை அதிகாரியாக நடித்த பெண், இரண்டு பெண்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். குற்றவாளிகளை பிடிக்க, பணத்தை எடுத்து ஒரு “பொறி” அமைக்குமாறு அவர்களை வற்புறுத்தினார். மன அழுத்தத்தின் கீழ், அந்தப் பெண்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினர். ஒருவர் பல ஆயிரம் பிராங்குகளை ஒரு கார் கீழே வைத்தார், மற்றவர் குறிப்பிட்ட இடத்தில் ஜன்னல் வழியாக பணத்தை வீசினார்.

இந்த இரு சம்பவங்களும் கடந்த சில நாட்களில் ஆர்காவ் கான்டனில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளன..துரதிர்ஷ்டவசமாக, இதேபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் மோசடிக் கும்பல்கள், பல்வேறு கதைகளைப் பயன்படுத்துகின்றன: அக்கம்பக்கத்தில் கொள்ளையர்கள் இருப்பதாகவோ, நெருங்கிய உறவினருக்கு கடுமையான விபத்து ஏற்பட்டதாகவோ, அல்லது வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் நடப்பதாகவோ கூறுகின்றனர்.
இந்த மோசடியாளர்கள் தந்திரமான பொய்களையும் கடுமையான மன அழுத்தத்தையும் பயன்படுத்தி பெரும் தொகையை கொள்ளையடிக்கின்றனர், துரதிர்ஷ்டவசமாக இது பலமுறை வெற்றியடைகிறது.
இத்தகைய அழைப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டாம் எனவும் அந்நியர்களுக்கு பணத்தை ஒப்படைக்கவோ அல்லது பொது இடங்களில் பணத்தை வைக்க வேண்டாம். இந்த மோசடி வடிவம் குறித்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள், குறிப்பாக முதியவர்களுடன் பேசுங்கள். விழிப்புணர்வு தான் இதற்கு மிகச் சிறந்த பாதுகாப்பு, இதனால் அவசர காலத்தில் சரியாக செயல்பட முடியும். ஆர்காவ் கான்டன் காவல்துறை இதுதொடர்பில் மீண்டும் எச்சரித்துள்ளது.
@Kapo AG