சுவிட்சர்லாந்து செல்வப் பகிர்வில் அதிர்ச்சி தரவுகள் : ஆய்வில் வெளியான தகவல்
உலகின் மிகச் செல்வந்த நாடுகளில் ஒன்று என்று கருதப்படும் சுவிட்சர்லாந்தில், செல்வம் சமமாக பகிரப்பட்டிருக்கவில்லை என்பதை புதிய ஆய்வு தெளிவுபடுத்துகிறது. World Inequality Database வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் செல்வந்தர்களில் முதலிடம் வகிக்கும் மேலான 1% மக்கள், நாட்டின் மொத்த தனிப்பட்ட செல்வத்தில் 31% க்கும் அதிகமான பங்கைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில், மிகக் குறைந்த வருமானம் பெற்ற கீழேயுள்ள 50% மக்களிடம் மொத்தத்தில் 3.7% செல்வம் உள்ளது.
சுவிட்சர்லாந்தில் செல்வச் சீர்மையின்மை அதிகரித்து வருவதற்கான காரணங்களில் ஒன்றாக, வெளிநாட்டவர்களின் செல்வக் கூடுதல் முக்கிய காரணம் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் உள்ள ‘Flat Tax’ முறைபல நேரங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. இம்முறை, வருமானம் அல்லது மொத்த சொத்துக்களை அடிப்படையாகக் கொள்ளாமல், சுவிட்சர்லாந்தில் வாழும் செலவை அடிப்படையாகக் கொண்டு வரி வசூலிக்கிறது. இதனால் பணக்கார வெளிநாட்டவர்கள் பெரிதும் பயன் அடைகின்றனர்; இது, நாட்டின் செல்வச் சுரண்டலை மேலும் அதிகரிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

செல்வ வித்தியாசம் கணிசமான அளவு கொண்டுள்ளது. கீழேயுள்ள 50% மக்களின் சராசரி செல்வம் ஒருவருக்கு 25,000 ஃப்ராங்காக கணக்கிடப்படுகிற நிலையில், உயர்ந்த 1% குழுவில் ஒருவருக்கான சராசரி செல்வம் 2.1 கோடி ஃப்ராங்குகளைத் தாண்டுகிறது. இந்த அளவிலான வேறுபாடு, சுவிட்சர்லாந்தின் பொருளாதார அமைப்பில் செல்வம் எவ்வாறு மிகச்சிலரிடம் சுருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.
சுவிட்சர்லாந்து உலகளவில் நிலையான பொருளாதாரத்தையும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் கொண்ட நாடாக இருந்தாலும், வருமான சமநிலை மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த விவாதங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
© KeystoneSDA