சுவிட்சர்லாந்தில் பல வீடுகள் மீது முட்டை வீச்சு : போலீசார் தேடுதல் வேட்டை
ஊரி மாகாணத்தின் பிரெஸ்டெனெக் தெரு, ஷேகென்வால்ட் தெரு, ஸ்வையர் காசே மற்றும் ஷாகென் காசே பகுதிகளில் உள்ள வீடுகளின் வெளி சுவர்கள், 2025 ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 17 வரை மர்ம நபர்களால் முட்டை வீச்சுக்கு இலக்காகியுள்ளது.
போலீசின் முதல் கட்ட விசாரணை மற்றும் ஒரு முக்கிய சாட்சியாரின் தகவலின்படி, இந்த செயலுக்கு பொறுப்பானவர்கள் இளைஞர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் முட்டைகளை அருகிலுள்ள ஒரு விற்பனைக்கூடத்தில் இருந்து திருடி, பின்னர் வீடுகளின் சுவர்களில் வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் E-Bikes குறித்து உடைமையாளர் யார் என்பதையும் உறுதிப்படுத்த போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. போலீசார் பொதுமக்களிடம், தொடர்புடைய தகவல்கள் இருந்தால் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
@Kapo Uri