சுவிஸ் சுற்றுலா அமைப்பு அதன் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக, வெளிநாடுகளில் நாட்டின் அழகை ஊக்குவிக்கும் சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை அமைப்பு, ஆரம்பத்தில் தங்க நிறத்தில் அமைந்த ஒரு மலரின் நடுவில் ஒரு சுவிஸ் கொடியுடனான லோகோவை கொண்டிருந்தது.
இந்த மலர் 1995 முதல் அமைப்பின் அதிகாரப்பூர்வ சின்னத்தின் ஒரு பகுதியாக இருந்தது. எவ்வாறாயினும், இப்போது சுற்றுலா வாரியம் அதன் லோகோவை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
மேலும் சுவிட்சர்லாந்தின் அடையாளமாக நாட்டின் கொடியை விட என்ன இருக்கு முடியும் என்பதை போல புதிய லோகோவில் சுவிட்சர்லாந்தின் கொடி இடம்பெற்றுள்ளது.
இதன்படி புதிய லோகோவில் ‘சுவிட்சர்லாந்து’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு “T” என்ற வார்த்தைக்கு பதிலாக சுவிஸ் கொடி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.