deutsch மொழி எளிதில் கற்கலாம் வாங்க – DER/DIE/DAS பிரச்சினையா.? சுவிற்சர்லாந்தை பொறுத்தமட்டில் இங்கு நிரந்தமாக நீண்ட காலம் வாழ்பவராக இருந்தால் நிச்சயம் deutsch மொழி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மொழியானது A1, A2, B1, B2 என ஒவ்வொரு தரமாக பிரித்து அவரவர் வதிவிட குடியுரிமைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வகையான பாடநெறிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
deutsch மொழி எளிதில் கற்கலாம்
சுவிசில் வாழும் தமிழர்கள் மட்டும் இன்றி deutsch மொழி பயில ஆரம்பிக்கின்ற ஏனைய நாட்டவர்களுக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது என்னவோ deutsch மொழியில் இருக்கும் DER, DIE, DAS என்கிற artikel தான்.
இந்த DER, DIE, DAS நம்மவரில் பலரின் தலையை சொறியவைத்துள்ளது என்பது என்னமோ உண்மைதான். ஆனால் இந்த நாட்டின் சட்டம், deutsch மொழி பயின்றுதான் ஆகவேண்டிய கட்டாயத்தால் பலர் கடினப்பட்டு ஓரளவுக்கு இந்த மொழியை பயின்று முன்னேறியுள்ளார்கள்.
DER, DIE, DAS என்ற இந்த மூன்று artikelகளையும் கண்டு பயப்படும் எம்மவர்களுக்காக அது பற்றிய விரிவான, இலகுவான விளக்கங்களை கற்பிக்கிறார் இந்தப்பெண். இவருடைய பல காணொளிகள் பார்ப்பவர்களையும் படிப்பவர்களையும் இலகுவாக புரியும்படி வைக்கிறது. எனவே புரியாதவர்கள் கொஞ்சம் Try பண்ணித்தான் பாருங்களேன்.