ரோர்ஷாக் (Rorschach) படகு துறைமுகத்தில் உயிரிழந்த பெண் கண்டுபிடிப்பு
சூரிக் ஏரிக்கு அடுத்துள்ள போடன் ஏரி (Lake Constance) பகுதியில், ரோர்ஷாக் படகு துறைமுகத்திற்கு அருகே ஒரு பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சென்ட்கேலன் காவல்துறை (Kantonspolizei St. Gallen) வழங்கிய தகவலின்படி, உயிரிழந்தவர் 42 வயதான நைஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த பெண். அவர் அந்தப் பகுதி வாசி அல்ல எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறப்பதற்கு முந்தைய தகவல்கள்
கிடைத்துள்ள ஆரம்ப தகவல்களின் படி, அந்தப் பெண் தன் மரண நாளில் ரோர்ஷாக் ரயில் நிலையம் சுற்றுவட்டாரத்தில் காணப்பட்டுள்ளார். மேலும், அவர் அதற்கு முன் தினமே நகரத்தில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட நேரம் மற்றும் உடைமை
சம்பவ நேரத்தில், குறித்த ஏரியில் நீந்துவதற்காக அவர் தனது பையை கரையில் இருந்த இரண்டு மரங்களுக்கு இடையில் வைத்துவிட்டு நீரில் இறங்கியுள்ளார். அப்போது கருப்பு மற்றும் மஞ்சள் நிற நீந்தும் காலணிகள் (Flippers), கருப்பு நீந்தும் கண்ணாடிகள் (Goggles) அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.. இறுதியாக, இரவு 9 மணிக்குள், ரோர்ஷாக் படகு துறைமுகத்தின் வெளிப்புற சுவருக்கு அருகில், நீருக்குள் சில மீட்டர் தூரத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது.
காவல்துறையின் பொதுமக்கள் வேண்டுகோள்
இந்தப் பெண்ணை சம்பவ நாளில் பார்த்தவர்கள் அல்லது அவரது இருப்பிடத்தைப் பற்றி தகவல் வழங்கக்கூடியவர்கள் உடனடியாக Thal காவல் நிலையத்தை 058 229 80 00 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு சென்ட்கேலன் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
© Kapo SG