சுவிஸ் விமானப் படை மீது சைபர் தாக்குதல் – சுவிட்சர்லாந்தின் விமானப் படை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஸ்யாவைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பாடல் மென்பொருள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதனை மத்திய பாதுகாப்பு திணைக்களம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சைபர் தாக்குதலை மேற்கொண்டவர்கள் ஆயிரக் கணக்கான கோப்புக்களை களவாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.