பெர்ன் நகரில் ஆயிரக்கணக்கானோர் “காலநிலை நீதி”க்காக பேரணி – சமத்துவமான உலகை வலியுறுத்தினர்
சனிக்கிழமை பிற்பகல் பெர்ன் நகரில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்ட “காலநிலை நீதி”க்கான பேரணி நடைபெற்றது.
ஏற்பாட்டாளர்களும் போராட்டக்காரர்களும், காலநிலை நெருக்கடி உலகளாவிய சமத்துவமின்மையை அதிகரிக்கிறது, கோடிக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக தள்ளுகிறது, மேலும் காலனித்துவ மற்றும் ஆணாதிக்க அடக்குமுறைகளை வலுப்படுத்துகிறது என்று வலியுறுத்தினர்.

“இக்கட்டான நிலைமையை இனி முற்றிலும் தடுக்க முடியாது; அதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதற்காக ஒற்றுமை, விமர்சன சிந்தனை மற்றும் சமத்துவமான உலகுக்கான உறுதியான அர்ப்பணிப்பு தேவை” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பேரணியில் ஜெனீவாவைச் சேர்ந்த GREEN கட்சி தலைவர் லிசா மசோன் பங்கேற்றார். இந்த பேரணியில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் காவல்துறை துல்லியமான எண்களை வெளியிடவில்லை. எனினும் Keystone-SDA நிருபர் சுமார் 1,000 பேரை மதிப்பிட்டார், ஆனால் ஆஏற்பாட்டாளர்கள் பின்னர் 2,500 பேர் பங்கேற்றதாக தெரிவித்தனர்.