சென்ட்காலன் நகரில் வீட்டினுள் புகுந்த மர்ம மனிதர்.!!நேற்று செவ்வாய்க்கிழமை (17/10/23) சென்ட்காலன் மாகாணத்தில் வீடு ஒன்றினுள் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் 3வது மாடியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்து பலநூறு பிராங்குகள் திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான சந்தேக நபரை சென்ட்காலன் கன்டோனல் போலீசார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.