ChatGPT பயன்படுத்தும் மாணவர்கள் நீக்கப்படலாம் – பிரான்ஸில் அதிரடி..!! உலக புகழ் பெற்று வரும் ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் (Artificial Intelligence) தடை செய்ய பிரான்ஸின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான Sciences Po தடை செய்யப்பட்டுள்ளது.
மோசடிகளையும் கருத்துத் திருட்டையும் தவிர்ப்பதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பல்கலைக்கழகம் கூறியது.
ChatGPTயும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த மற்ற கருவிகளும் தடை செய்யப்படுவது குறித்து மாணவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் மேற்பார்வையுடன் மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்தலாம் என அது தெரிவித்தது. தடையை மீறி பயன்படுத்துவோர் பல்கலை அல்லது மேல் படிப்பிலிருந்து நீக்கப்படலாம்.
அமெரிக்காவின் நியூயார்க், சியாட்டல் ஆகிய மாநிலங்களில் உள்ள சில பொதுப் பாடசாலைகளில் ChatGPTயைத் தடை செய்துள்ளன.