சுவிஸ் நாட்டில் 2024 இல் ஏற்படப்போகும் மாற்றம் : நன்மையும் தீமையும் சுவிட்சர்லாந்தில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக பல பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் விலைவாசிகளின் போக்கு எப்படி இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
எதிர்வரும் வருடம் ஒரு சில விடயங்களுக்கு விலை ஏற்றம் காணப்பட்டாலும் சில விடயங்களுக்கு விலை குறையும் என்ற தகவல் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 2022 இல் உக்ரைனில் நடந்த போர் உலகளாவிய பணவீக்கத்தைத் தூண்டிய பிறகு, சுவிட்சர்லாந்தில் பல பொதுவான நுகர்வோர் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன
சில பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் 2024 இல் என்ன நடக்கும் என்ற கேள்வியும் அச்சமும் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. நல்ல செய்தி என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் தற்போது குறைந்துள்ளது.
2022 இல் 3 சதவீதத்தில் இருந்து தற்போது 1.7 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இது சில நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணவீக்க விகிதம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது- 1.9 சதவிகிதம் அளவில் சில நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் சிறிது குறையும் எனக்குறிப்பிடப்படுகிறது.
ஆனால் முதலில் அடுத்த ஆண்டு எவ்வாறான விடயங்களுக்கு விலை அதிகரிப்பு ஏற்படும் என்பது தொடர்பாகவும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அடுத்த ஆண்டு அதிகரிக்கும்.
அவை 8.7 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாகாணங்களுக்கு மாகாணம் வேறுபடும். உதாரணமாக, டிசினோ குடியிருப்பாளர்கள் மிக உயர்ந்த அதிகரிப்பை அனுபவிப்பார்கள் எனச்சொல்லப்படுகிறது-
குறிப்பாக அம்மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு 10.5 சதவீதமாகவும், சூரிச் மாகாணத்தில் 8.3 சதவீத அதிகரிப்பும் ஏனைய மாகாணங்களில் முறையாக 8.7 இல் இருந்து 10.2 வரையிலான அதிகரிப்பு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மின்சாரம் வழங்குபவர்களைக் கொண்ட வாட் கன்டோனில், உயர்வுகள் 32 முதல் 40 சதவிகிதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக மின்சாரக்கட்டணங்களும் எதிர்வரும் ஆண்டு அதரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கட்டணங்கள்குடும்பங்களுக்கு சராசரியாக 18 சதவீதம் அதிகரிக்கும் . இருப்பினும், இங்கும் இந்த விலைகள் தனிப்பட்ட மண்டலங்கள் மற்றும் நகராட்சிகளில் தேசிய சராசரியை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். உதாரணமாகஇ சூரிச் குடியிருப்பாளர்கள் 24.5 சதவீத அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்,
ஜெனீவாவில் கட்டணங்கள் 28.6 சதவிகிதம் அதிகரிக்கும். அடுத்ததாக வீட்டுவாடகையும் விலைஅதிகரிப்பை சந்திக்கும். இவ்வாண்டு அக்டோபரில் சிலரின் வாடகை 3 சதவிகிதம் அதிகரித்ததைதொடர்ந்து, பல குத்தகைதாரர்கள் ஏப்ரலில் மற்றொரு 3 சதவிகித உயர்வால் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகிறது.
எனினும் உங்கள் தனிப்பட்ட வாடகை ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு காலம் மாறுபடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்தில் விலை அதிகரிப்பை சந்தித்திருக்கின்ற சந்திக்கப்போகின்ற இன்னுமொரு விடயம் போக்குவரத்துக்கட்டணங்கள்.
டிசம்பர் 10 ஆம் தேதி முதல், சுவிட்சர்லாந்தில் புதிய ரயில் கால அட்டவணை தொடங்கிய போது, புதிய, அதிக கட்டணங்களும் அமலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஏழு ஆண்டுகளில் சுவிஸ் பொதுப்போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்க ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது. சுவிஸ் பொது ரயில்வே சேவை, பேரூந்து சேவை, கப்பல் சேவை, மற்றும் நகர்ப்புற உள்ளுர் ட்ராம் சேவைகள் சுமார்4.3 சதவீத அதிகரிப்பை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரி, விலைவாசி எவ்வாறான விடயங்களுக்கு அதிரிக்கும் என்பதை பார்த்திருந்தோம். இப்போது கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தியினை பார்க்கலாம். அடுத்த ஆண்டில் இருந்து எவ்வாறான விடயங்களுக்கு விலை சற்று குறையலாம் என்பது தொடர்பாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசியால் நொந்து நூலாகிப்போயிருக்கும் சுவிட்சர்லாந்து மக்களுக்கு இது கொஞ்சமேனும் ஆறுதல் தரும் செய்தியாகவே இருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் பிரபல நாளிதழ் ஒன்றால் நேர்காணல் செய்யப்பட்ட பொருளாதார வல்லுனர்களினால் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக எண்ணெய்இ பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றிற்கு நுகர்வோர் குறைவான கட்டணத்தை செலுத்துவார்கள் என்று கூறுகிறார்கள்; ஏனைய தயாரிப்புகளும் மலிவாக இருக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள.
இறுதியாக, ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம், சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் சில இறக்குமதி பொருட்களின் விலையைக் குறைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த தேதியில் இருந்து, கிட்டத்தட்ட அனைத்து தொழில்துறை பொருட்களின் மீதான இறக்குமதி வரிகள் ரத்து செய்யப்படும். அதாவது சைக்கிள்கள், கார்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள் மற்றும் பாதணிகள் போன்ற பொருட்கள் சுவிட்சர்லாந்திற்கு இறக்குமதி செய்யப்படும் போது சுங்க வரிக்கு உட்படுத்தப்படாது எனவும் இதனால் அவற்றின் விலைகள் குறைவடையாலாம் எனவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் உறவுகளே மேலும் இதுபோன்ற முக்கியமான சுவாரசியமான செய்திகள் தகவல்களை தினமும் அறிந்து கொள்ள தயவுசெய்து எமது சானலை சப்கிரைப் பண்ணி ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி.