ஜெனீவாவில் பறிமுதல் செய்யப்பட்ட செல்வத்தை மத்திய ஆபிரிக்காவுக்கு உதவி.!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நீதிமன்றம் பறிமுதல் செய்த ஆடம்பர வாகனங்களின் ஏலத்தில் கிடைத்த பணம், மத்திய ஆபிரிக்காவின் ஈக்வேட்டோரியல் கினியாவில் ( Equatorial Guinea.) நடைபெறும் ஒரு சுகாதாரத் திட்டத்திற்கு வழங்கப்பட உள்ளது.
2016 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 25 உயர்தர கார்கள் – லாம்போர்கினி, பெராரி உள்ளிட்டவை – ஏலத்தில் விற்கப்பட்டதில் இருந்து 2.3 கோடி சுவிஸ் பிராங்க் (CHF 23 மில்லியன்) வசூலிக்கப்பட்டது. இந்த வாகனங்கள், நாட்டின் அதிபரின் மகன் டியடோரோ ஒபியாங் கொண்டு வந்தவையாகும். அவரது தந்தை 1982 முதல் எண்ணெய் வளமிக்க இந்த ஆப்பிரிக்க நாட்டை ஆட்சி செய்து வருகிறார். ஆனால் எண்ணெய் வருமானத்தின் பலன் மக்களிடம் சேராமல், பெரும்பாலோர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஜெனீவா மற்றும் பிரான்ஸ் நீதிமன்றங்கள் ஒபியாங்கிற்கு பண மோசடி மற்றும் அரசுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தண்டனை அளித்துள்ளன. இப்போது, ஏலத்தில் கிடைத்த பணம் நாட்டின் மிகவும் பாதிக்கப்படும் மக்களை குறிவைக்கும் சுகாதாரத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்துக்குள்ளான ஈக்வேட்டோரியல் கினியா ஆட்சியில், இந்த நிதி நேரடியாக மக்களின் நலனுக்குச் செலுத்தப்படுவது, அந்த நாட்டின் பொதுமக்களுக்கு சிறிதளவு நம்பிக்கையைக் கொடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
© WRS