சென்ட்காலன் கன்டோன் கொசாவ் நகரில் நேற்றைய தினம் இருவேறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 11 மணியளவில் ஒரு கார் மற்றும் சைக்கிள் ஓட்டி மீதான விபத்து பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்இ நேற்று காலை 11 மணியளவில் இண்டஸ்ட்ரி திரஸ்ஸாவிலிருந்து 76 வயதான நபர் ஒருவர் காரில் சென்றுள்ளார்.
அப்போது எதிரில் சைக்கிளில் பயணித்த 57 வயதான நபருடன் கார் மோதி விபத்தினை சந்தித்துள்ளது. இதன்போது சைக்கிள் ஓட்டிவந்த நபர் காயமடைந்து அவசர மருத்துவ ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை என போலீசார் குறிப்பிடுகின்றனர். எனினும் இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்தின் சேதம் பல்லாயிரம் பிராங்குகள் வரை கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதே வேளையில்,
கொசாவ் நகரில் நேற்றைய தினம் மற்றுமொரு விபத்து பதிவாகியுள்ளது. மூஸ்விஸ் திரஸ்ஸாவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. 22 வயதான கார் ஓட்டிச்சென்ற இளைஞன் ஒருவரை விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
PhotoCredits: Kantonspolizei St.Gallen
இதன்போது பொது உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பல லட்சம் பிராங்கள் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.