Jungfraujoch பகுதிக்கு ‘பயணிக்க வேண்டாம்’ பிரபல அமெரிக்க பயண வழிகாட்டி தகவல்.!
பிரபல அமெரிக்க பயண வழிகாட்டி புத்தகமான (Fodor’s)ஃபோடர்ஸ், Jungfrau பகுதியை பயணம் செய்யக்கூடாத இடங்களின் பட்டியலில் சேர்த்ததை ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் ஓபர்லாண்ட் பகுதியில் உள்ள சுற்றுலா அதிகாரிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் மெக்சிகோ சிட்டி, மொம்பாசா, கனரி தீவுகள் போன்ற இடங்களுடன் Jungfrau வும் இடம்பெற்றுள்ளது.
இதற்கான காரணமாக ‘அதிகப்படியான Tourism’ குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலை சேதப்படுத்துகிறார்கள் என்பதால், இப்பகுதிகளைத் தவிர்க்குவது நல்லது என்று (Fodor’s) ஃபோடர்ஸ் பரிந்துரைக்கிறது. மேலும், அதிகரித்து வரும் சுற்றுலாப் பெருக்கை கட்டுப்படுத்தி, இயற்கை சூழலைப் பாதுகாக்க இந்த பகுதி போராடுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் Jungfraujoch சுற்றுலா அலுவலகத்தின் பிரதிநிதி மார்க் உங்கெரர் இந்த மதிப்பீட்டை தவறானதாக நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டில் இப்பகுதிக்கு வந்தவர்கள் எண்ணிக்கை வெறும் ஒரு மில்லியன் மட்டுமே என்றும், பட்டியலில் உள்ள பிற இடங்களுடன் இதை ஒப்பிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். உள்ளூர் மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் மிகப் பெரிய கூட்ட நெரிசல் கொண்ட Tourist இடங்களுடன் Jungfrau வை இணைத்துப் பேசுவது பொருந்தாது என அவர் வலியுறுத்துகிறார்.

மேலும், உண்மையில் இதற்கு முழுமையாக மாறான நிலை உள்ளது என்றும், சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் வருமானம் இப்பகுதியில் மிகச் சிறந்த பொது போக்குவரத்து வசதிகளை உருவாக்க உதவி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களுக்கும் பெரிய பயனாக இருப்பதாக அவர் கூறினார்.
சுவிட்சர்லாந்தின் முக்கியமான ஆல்ப்ஸ் Tourust மையங்களில் ஒன்றான Jungfrau பகுதி, இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வரும் தமிழ் சுற்றுலாப் பயணிகளிடமும் மிகவும் பிரபலமான இடமாகும். அதனால் இந்த சர்ச்சை அடுத்த நாட்களில் மேலும் கவனம் பெறக்கூடும்.