ஐரோப்பாவின் மிகச்சிறந்த பழமையான நகர மையங்கள் தரவரிசையில் பெர்ன் 25-வது இடம்
ஐரோப்பாவில் வரலாறு மற்றும் அழகு ஒன்றிணைந்த பழமையான நகர மையங்கள் எவை? இதற்கான விடையை சுற்றுலா நிறுவனம் டூர்லாண்ட் (Tourland) தனது புதிய ஆய்வில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் சுவிட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே நகரம் பெர்ன் ஆகும்.
பெர்ன் 25-வது இடத்தில்
சுவிஸ் கூட்டாட்சியின் தலைநகரான பெர்ன், தனது மூடப்பட்ட நடைபாதைகள் (Lauben) மற்றும் சாந்தமான சூழலால் மதிப்பெண்கள் பெற்றது. இருப்பினும், நகர வழிகாட்டி சேவை (City Tour) மிகவும் உயர்ந்த விலையில் இருப்பதால், பெர்ன் மேலிடங்களில் இடம் பெற முடியவில்லை. மதிப்பீட்டின்படி, பெர்னில் நகரச் சுற்றுலா செலவு, பட்டியலில் இடம்பெற்ற அனைத்து நகரங்களிலும் அதிகம்.

மதிப்பீட்டு அளவுகோல்கள்
டூர்லாண்ட் ஆய்வில் நான்கு அம்சங்கள் கருதப்பட்டன:
-
நடைபாதை உகந்தமை (50%)
-
தெருக்கள் மற்றும் கட்டிடங்களின் வயது (20%)
-
நகர வழிகாட்டி சேவையின் செலவு (20%)
-
இன்ஸ்டாகிராம் பிரபல்யம் (10%)
இந்தக் கணக்கீடு, ஒரு நகரின் வரலாறு, சூழல், நடைபயண சுலபம் மற்றும் நவீன புகழ் ஆகியவற்றை ஒன்றிணைத்து தரவரிசை அமைக்கிறது. முதல் 10 இடங்களில் முறையே,,,
-
கிரகோவ் – போலந்து
-
நேபிள்ஸ் – இத்தாலி
-
ரெகென்ஸ்பர்க் – ஜெர்மனி
-
ரிகா – லாட்வியா
-
சான் மரினோ – சான் மரினோ
-
அவினியான் – பிரான்ஸ்
-
வில்னியஸ் – லித்துவேனியா
-
வர்சா – போலந்து
-
சால்ஸ்பர்க் – ஆஸ்திரியா
-
கிராஸ் – ஆஸ்திரியா .. ஆகியவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.