Basel – Hölstein பகுதியில் விபத்து – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்.!!
நவம்பர் 15, 2022, செவ்வாய்கிழமை மாலை, 5:30 மணிக்குப் பிறகு, Hölstein BL இல் (திசை Bennwil – Diegten) Hauptstrasse மற்றும் Bennwilerstrasse இடையே சந்திப்பில் இரண்டு பயணிகள் கார்களுக்கு இடையே பின்புறம் மோதி விபத்துக்குள்ளாது.
இதன் போது இரு கார்களிலும் பயணம் செய்த 5 பணிகளும் சேதங்களுக்கு உள்ளாகினர். சம்பந்தப்பட்ட 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Basel-Landschaft பொலிஸாரின் தகவலின் படி, 31 வயதான ஒரு ஓட்டுநர் தனது சிவப்பு நிற காரை Bennwil லில் இருந்து பிரதான சாலையில் Diegten திசையில் ஓட்டிச் சென்றார்.

பின்னர் Hauptstrasse/Bennwilerstrasse சந்திப்பில், ஓட்டுநர் முன் செல்ல அனுமதிக்கப்படாததால், அவர் தனது வாகனத்தை நிறுத்தினார். இதன் பின்னால் வந்த ஒரு சாம்பல் நிற காரை ஓட்டி வந்த 34 வயது ஓட்டுநர் இதை மிகவும் தாமதமாக உணர்ந்து, முன் நின்ற காரை வேகமாக முட்டி தள்ளியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்து போன இருவரது வாகனங்கள் சிறிது தூரம் அடித்து வீழ்த்தப்பட்டதுடன் காரில் இருந்தவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு வாகனங்களில் இருந்த அனைவரும் ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 2 குழந்தைகளும் உள்ளடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.