Basel City இல் குழந்தைகள் இல்லாத குடும்பங்களுக்கும் வீட்டு வாடகை உதவித்தொகை!
Basel City இல் முந்தைய நாட்களில், குறைந்த வருமானம் கொண்ட குழந்தைகள் உடைய குடும்பங்களுக்கு வீட்டு வாடகை செலவுகளுக்கு Basel City கன்டோனிடமிருந்து நிதி உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.
இப்போது, ஜூலை 1, 2025 முதல், குழந்தைகள் இல்லாத தம்பதிகள் மற்றும் வீடுகளில் வசிக்கும் மற்ற வருமனக்குறைவானோர் கூட இந்த உதவிக்குத் தகுதி பெறுவார்கள் என்று Basel அதிகாரிகள் செவ்வாயன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளனர்.
இந்த உதவித்தொகை மாதத்திற்கு 50 CHF முதல் 1,060 CHF வரை வழங்கப்படும். இது வருமானம், வீட்டின் அளவு மற்றும் தற்போதைய வாடகைத் தொகையைப் பொறுத்து வேறுபடும்.

இதற்குத் தகுதி பெற, தம்பதிகளின் வருட வருமானம் அதிகபட்சம் 50,000 CHF க்குள் இருக்க வேண்டும். மேலும், அந்த வீட்டில் வசிப்பவர்களில் ஒருவர் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு மேலாக Basel -சிட்டியில் வசித்து இருக்க வேண்டும்.
இந்த புதிய முடிவின் மூலம், மொத்தம் 3,250 குடும்பங்கள் கூடுதலாக வீட்டு வாடகை உதவிக்குத் தகுதி பெறவிருக்கின்றன. இது basel-சிட்டி கன்டோன் மக்களுக்கு வசதியாகவும், வீட்டு செலவுகளை சமாளிக்க உதவியாகவும் அமையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
@♠Keystonde SDA