குண்டுப் பீதி காரணமாக பேசல் விமான நிலையம் மூடப்பட்டது வெடிகுண்டு மிரட்டல் காரணமாக யூரோ ஏர்போர்ட் ஞாயிற்றுக்கிழமை விமான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது.
அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்காலிக அடிப்படையில் விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமான நிலையம் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன.
கடந்த ஒக்ரோபர் மாதமும் இவ்வாறு போலி குண்டுப் பீதி காரணமாக விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய வெடிகுண்டு மிரட்டலுக்குப் பிறகு பாஸல் விமான நிலையம் மெதுமெதுவாக தமது செயல்பாடுகளை அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.