சுவிட்சர்லாந்தில் Self-scanning கவுன்டர்கள் மூலம் திருட்டுகள் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் மற்றும் ஐரோப்பாவில் வேகமாக பரவி வரும் Self-scanning கணக்குப் பதிவு முறைகள் கடைகளில் திருட்டுக்களை பெரிதும் அதிகரிக்கின்றன என்று சில்லறை வணிக நிபுணர் பிலிப் மீத் எச்சரித்துள்ளார். ஜெர்மன் வணிக நிபுணரான அவர் “20 Minuten” இணைய இதழுக்கு அளித்த பேட்டியில், “இத்தகைய கவுன்டர்களில் திருட்டு சம்பவங்கள் பாரம்பரிய கவுன்டர்களைவிட 15 முதல் 30 சதவீதம் அதிகம் என நாங்கள் கணக்கிடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பல சூப்பர் மார்க்கெட்டுகள் தற்போது நவீன பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துகின்றன. இதில் செயற்கை நுண்ணறிவு, வீடியோ கண்காணிப்பு, எடைக் கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களின் சீரற்ற சோதனைகள் அடங்கும். இவை அனைத்தும் திருட்டைத் தடுக்கும் முயற்சியாக செய்கின்றன.”

அமெரிக்காவில், அதிகமான திருட்டுச் சம்பவங்களால் பல கடைகள் இந்த Self-scanning கவுன்டர்களை அகற்றி வருகின்றன. ஆனால் ஐரோப்பாவிலும் சுவிட்சர்லாந்திலும் இம்முறை இன்னும் விரிவுபடுத்தப்படுகிறது, அதே நேரத்தில் சிலர் இதை விமர்சிக்கின்றனர். சில நிறுவனங்கள் எதிர்பார்த்த பயனும் செலவு குறைப்பும் இல்லாததால் இதை நிறுத்தியுள்ளன.
Self-scanning கவுன்டர்கள் ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்தாலும், செலவில் பெரிய சேமிப்பு இல்லை. நான்கு இயந்திரங்கள் கொண்ட ஒரு அமைப்பின் விலை 80,000 முதல் 120,000 யூரோ வரை இருக்கும், ஆனால் ஒரு சாதாரண கவுன்டர் 10,000 முதல் 20,000 யூரோவிலேயே கிடைக்கும்.”
இந்த முறை பெரிய கடைகள் மற்றும் அதிக வாடிக்கையாளர் வருகையுள்ள இடங்களில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இதனால் ஊழியர்கள் தேவைக்கேற்ப வேலை நேரத்தை மாற்றி, பிற பணிகளில் ஈடுபட முடியும். இதனால் கடைச் செயல்திறன் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.