வீட்டுக்குடும்பங்களுக்கு சுகாதார காப்பீட்டு கட்டண உயர்வு பெரும் சுமை**
2026ஆம் ஆண்டுக்கான சுகாதார காப்பீட்டு கட்டணங்கள் சராசரியாக 4.4 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு பல குடும்பங்களுக்கு ஏற்க முடியாத சுமையாக மாறும் என சமீபத்தில் தமீடியா ஊடகக் குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 35 சதவீதம் பேர் இந்த உயர்வு தங்களின் குடும்ப நிதியில் மிகுந்த சுமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதில் 9 சதவீதம் பேர் கட்டணம் செலுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் எனவும், 5 சதவீதம் பேர் எவ்வாறு சமாளிப்பது என்றே தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர்.

மாறாக, 28 சதவீதம் பேர் இந்த உயர்வு தங்களின் செலவுத்திட்டத்தில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என பதிலளித்துள்ளனர்.
சுகாதார காப்பீடு ஸ்விட்சர்லாந்தில் கட்டாயமாக உள்ளதால், அங்குள்ள குடும்பங்கள் வருடாந்திர கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது. இருப்பினும், கட்டணத்தைச் செலுத்த முடியாத குடும்பங்கள் தங்கள் வசிக்கும் கண்டோன் அரசின் உதவிக்காக விண்ணப்பிக்கலாம் என்பது நினைவூட்டப்படுகிறது.
சமீப ஆண்டுகளில் சுகாதார காப்பீட்டு செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவது பல நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. நிபுணர்கள் இது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கும் நிலையில் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.
© KeystoneSDA