சுவிஸ் மாகாணம் ஒன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம் வெள்ளியன்று இரவு கன்டோன் வலைசிலுள்ள அரோலா அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ETH சூரிச் இல் உள்ள சுவிஸ் நில அதிர்வு சேவை இந்த நிலநடுக்கம் பரந்த பகுதியில் உணரப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
வெள்ளியன்று இரவு 11:25 அளவில் அரோலாவிற்கு மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அளவு நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ் நில அதிர்வு சேவை குறிப்பிடுகையில், சுவிட்சர்லாந்து மற்றும் அண்டை நாடுகளில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று முதல் நான்கு பூகம்பங்கள் அல்லது வருடத்திற்கு 1,000 முதல் 1,500 பூகம்பங்கள் வரை பதிவு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட 10 முதல் 20 பூகம்பங்கள் உண்மையில் மக்களால் உணரப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (கீஸ்டோன்-எஸ்டிஏ)