Altdorf UR இல் கத்தியுடன் அலைந்த பெண்ணை கைது செய்த போலீசார் வெள்ளிக்கிழமை பிற்பகல் Altdorf இல் கத்தியுடன் சுற்றித்திரிந்த ஒரு பெண்ணை ஊரி கன்டோனல் போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண் ஒரு மருத்துவரின் கண்காணிப்பில் தற்போது வைக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த பெண்ணால் யாருக்கும் காயம் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் Altdorf இல் ஒரு பெண் கத்தியுடன் சுற்றித் திரிவதாக வெள்ளிக்கிழமை பிற்பகல் காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் காவல் நிலையம் அருகில் 45 வயது பெண்ணை கைது செய்ய முடிந்ததாக தெரிவித்தனர்.

எனினும் குறித்த பெண் யார் எதற்காக இவ்வாறு கத்தியுடன் அலைந்து திரிந்தார் என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை தற்போது போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.