ஜெனீவா பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு தடுப்பு திட்டம் அறிமுகம்
ஜெனீவாவின் தொடக்கப் பள்ளிகளில் விரைவில் ஆயுதத் தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. ஆயுதம் தாங்கிய நபர்கள் பள்ளிகளில் நுழையக்கூடும் என்ற அச்சம் காரணமாக, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு முதலே பெற்றோர்கள் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோரி வந்தனர். அதனைத் தொடர்ந்து, அக்டோபர் மாத இறுதிக்குள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்கப்பட உள்ளது. நவம்பர் மாதத்தில் மேல்நிலைப் பள்ளிகளும் இதே திட்டத்தில் சேர்க்கப்படும்.

பாதுகாப்பு காரணங்களால் திட்டத்தின் முழு விவரங்கள் பொதுவாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், புதிய கட்டிடங்களில் மட்டுமே அவசர எச்சரிக்கை பொத்தான்கள் பொருத்தப்படும் என்பது உறுதியாக கூறப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஜெனீவா காவல்துறைக்கு ஆறு முறை துப்பாக்கிச் சூடு எச்சரிக்கை வந்துள்ளன. அவை அனைத்தும் தவறான எச்சரிக்கைகளாக இருந்தாலும், இந்த புதிய திட்டம் எதிர்காலத்தில் உண்மையான ஆபத்துகளைத் தடுக்க உதவும் என நம்பப்படுகிறது.
ஐரோப்பிய நகரங்களில் பள்ளிகள் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், ஜெனீவாவின் இந்த முயற்சி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை உயர்த்தும் ஒரு முக்கியமான அடியாக பார்க்கப்படுகிறது.
© WRS