கான்ஸ்டன்ஸ் ஏரியில் 27 வயது இளைஞர் ஒருவர் மூழ்கி மரணம்
துர்காவ் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி திங்கட்கிழமை, கோஸ்டன்ஸ் ஏரிவில் நடைபெற்ற நீச்சல் சம்பவத்தில் ஒரு 27 வயது ஆஸ்திரியா இளைஞர் உயிரிழந்தார்.
சம்பவத்தின் போது இளைஞர் ஏரி அருகே உள்ள ஒரு தளத்தின் அருகே நீந்திக் கொண்டிருந்த போது தீடீரெனஅவர் தண்ணீருக்குள் விழுந்தார். சம்பவ இடத்தில் இருந்த காப்பாளர் அவரை மீட்டு உயிர் காப்பாற்ற முயன்றார். பின்னர், அவசரமாக REGA ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
துர்காவ் மாகாண போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணைத் தொடங்கியுள்ளது. அதிகாரிகள், மரணத்தின் உண்மையான காரணங்கள் விசாரணையின் முடிவில் வெளிப்படும் என தெரிவித்துள்ளனர்.
@Kapo TG