பாசல் யூரோ ஏர்போர்ட்டில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – பயணிகள் வெளியேற்றம்.!! இன்று மதியம் Basel விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூரோ ஏர்போர்ட் என்றழைக்கப்படும் பாஸல்-மல்ஹவுஸ் விமான நிலையத்தில் பயணிகள் திடீரென வெளியேற்றப்பட்டதால் அங்கு பல மணி நேரம் பதட்டநிலை ஏற்பட்டது.
வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் பயணிகள் வெளியேற்றப்பட்டு பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியமுடிந்தது.
பிரான்ஸ் பக்கம் அமைந்துள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அப்பகுதியில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட வேண்டிய ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிற்பகல் 3:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையில் வெடிகுண்டா அல்லது தவறான எச்சரிக்கையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இணையதளத்தில், சில விமானங்கள் இரவு 11:25 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சில விமானங்கள் ஜெனிவா விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.