சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பொது தேர்தலில் வெளிநாட்டவர்கள் வாக்களிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 22 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சுவிட்சர்லாந்தில் பொது தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் கான்டன் வாரியாகவும் நகராட்சி வாரியாகவும் சில சந்தர்ப்பங்களில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
அவ்வாறான பொது வாக்கெடுப்புக்களில் வெளிநாட்டவர்கள் வாக்களிக்க சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.
எனினும் பொது தேர்தலில் சுவிஸ் பிரஜைகள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
சுவிட்சர்லாந்தில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தாலும் வெளிநாட்டவர்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமை இதுவரையில் வழங்கப்படவில்லை.
பல்வேறு தரப்பினரும் வெளிநாட்டவர்களும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
Source:- Tamilinfo