சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் பல நிறுவனங்கள் வங்குரோத்து அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் வங்குரோத்து அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.’
இந்த ஆண்டின் நிறைவில் சுமார் 10,000 நிறுவனங்கள் வங்குரோத்து அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 700 நிறுவனங்கள் வங்குரோத்து அடைந்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் இவ்வாறான ஒரு நிலைமை இதற்கு முன்னர் இருந்ததில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் வங்குரோத்து எண்ணிக்கை 20 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கட்டுமானத்துறை, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, முகாமைத்துவ ஆலோசனை மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் அதிக அளவில் வாங்குரோத்து பதிவாகியுள்ளன.
இதேவேளை இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 38302 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விடவும் 3.3 வீத அதிகரிப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.